தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி (இன்று) வரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்தநிலையில் இந்த ஊரடங்கை 7-ந் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:-
* ஆங்கில, நாட்டு மருந்தகங்கள், கால்நடை மருந்தகங்கள், செல்லப்பிராணிகளுக்கான தீவன விற்பனையகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* பால், குடிநீர் மற்றும் பத்திரிகைகள் வினியோகம் செய்ய அனுமதியுண்டு.
* வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கறி, பழம் மற்றும் மளிகைப்பொருட்களை அனுமதியுடன் விற்பனை செய்யலாம். ஆன்லைன் அல்லது தொலைபேசி வாயிலாக மளிகைப்பொருட்கள் ஆர்டர் பெற்று அவற்றை காலை 7 முதல் மாலை 6 மணி வரை வீடுகளில் வழங்க அனுமதி உண்டு.
* ரேஷன் கடைகள் காலை 8 முதல் பகல் 12 மணி வரை இயங்கலாம்.
* பெட்ரோல், டீசல் பங்குகள் செயல்படலாம். கியாஸ் சிலிண்டர் வினியோகத்துக்கு அனுமதி உண்டு.
தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி க
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட
மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்ட
முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான
மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல
தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக
மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம ஜெ. மறைவுக்கு சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினார்க சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி திமுக அரசு அனைத்து துறைகளிலும் பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புக
