More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாகிரி உயிருடன் இருக்கிறார்: ஐ.நா.சபை தகவல்!
அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாகிரி உயிருடன் இருக்கிறார்: ஐ.நா.சபை தகவல்!
Jun 06
அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாகிரி உயிருடன் இருக்கிறார்: ஐ.நா.சபை தகவல்!

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அந்த அமைப்புக்கு அய்மான் அல்-ஜவாகிரி பொறுப்பேற்றார்.



10 ஆண்டுக்கு முன்பு பொறுப்பேற்ற அவர் அமெரிக்காவுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அல்-ஜவாகிரியை கொல்வோம் என்று அமெரிக்கா தெரிவித்தது.



இதற்கிடையே அய்மான் அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக சமீப காலங்களாக தகவல் வெளியானது. ஆனால் அதை அல்-கொய்தா அமைப்பு உறுதிப்படுத்தவில்லை.



இதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பதில் கேள்விக்குறி நிலவி வருகிறது. இந்த நிலையில் அல்-கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாகிரி இறந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.



இதுகுறித்து ஐ.நா.சபை தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-



அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையேயான எல்லை பகுதியில் வசித்து வருகிறார்கள்.



இதில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் அல்-கொய்தா அமைப்பு தலைவர் அய்மான் அல்-ஜவாகிரியும் உள்ளார். அவர் உயிருடன் தான் இருக்கிறார். ஆனாலும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் பயங்கரவாதிகளின் பிரசார வெளியீடுகளில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.



அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக முன்னர் வெளியான தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை. அல்-கொய்தா அமைப்புடன் தலிபான் மற்றும் சில வெளிநாட்டு பயங்கரவாதிகளும் உள்ளனர்.



ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல்-கொய்தா மத்திய தலைமையுடன் இணைந்து இந்திய துணை கண்டத்துக்கான அல்-கொய்தா அமைப்பு செயல்பட்டு வருகிறது.



அல்-கொய்தா, தலிபான் தலைவர்களின் உரையாடல்களை சில நாடுகள் இடைமறித்து கேட்டுள்ளன. சமீப காலமாக இந்த உரையாடல்கள் குறைந்து உள்ளன. இந்திய துணை கண்டத்துக்கான அல்-கொய்தா அமைப்பு ஆப்கானிஸ்தானின் காந்தஹார், ஹெல் மந்த், நிர்முஸ்பில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul06

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவு

Sep17

சீனாவை அடக்குவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேல

May31

பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயத

May03

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற

Sep24

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட

Feb05

வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத

Mar06

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி

Apr14

அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ

Mar04

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சி

Jun16

உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ

Mar22

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jun07

இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்

Aug05
Mar24

அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு

May21

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:39 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:39 am )
Testing centres