இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ‘சூம்’ தொழில் நுட்பத்தின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஊடகங்களிடம் தெரிவித்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் முதல் கட்டமாக, இந்தத் திட்டம் வெலிக்கடை, அங்குனகொலபெலஸ்ஸ, பூஸா உள்ளிட்ட 6 சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.
கைதிகள் மத்தியில் கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டமானது, எதிர்காலத்தில் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார்.
கைதிகளின் சிறை இலக்கம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் நேரத்தில் ‘சூம்’ தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் தமது உறவுகள் மற்றும் நண்பர்களுடன் பேச முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் ப
கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289
யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தி
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின
10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்றைய தினம் இலங்கை வந
கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்த
சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறு
வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிக
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர
உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும்
பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்