மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பாலம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்த 4 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (15) காலையில் கைது செய்ததுடன் 4 உழவு இயந்திரங்களை மணலுடன் மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி கே.பி. பண்டார தெரிவித்தார்.
சிரேஷ்டகாவற்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்கா வின் ஆலோசனைக்கமைய சட்டவிரோத மணல் அகழ்வினை தடுப்பதற்காக அதில் ஈடுபடுவேரை கைது செய்யும் விசேட நடவடிக்கையை ஒன்று மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி கே.பி. பண்டார தலைமையிலான காவற்துறை குழுவினர் இன்று அதிகாலை மரப்பாலம் ஆற்று பகுதியினை சுற்றிவளைத்தனர்.
இதன்போது சட்டவிரோதமாக ஆற்றில் இருந்து உழவு இயந்திரத்தில் மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்ததுடன் 4 உழவு இயந்திரங்களை மணலுடன் மீட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை கரடியனாறு காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்
யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒ
கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ம
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 19ஆம் திகதி பங்களாதே
இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்