வளைகுடா நாடான குவைத்தின் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் அகமது நாசர் அல்முகமது அல்சபா, கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்தார். அவரது அழைப்பின்பேரில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று காலை குவைத் சென்றார்.
இது, குவைத்துக்கான அவரது முதலாவது இருதரப்பு பயணம் ஆகும். விமான நிலையத்தில் அவரை உதவி வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் ரசாக் அல்கலீபா வரவேற்றார். இந்திய தூதர் சிபி ஜார்ஜ் மற்றும் இந்திய அதிகாரிகளும் வந்திருந்தனர்.
இந்நிலையில், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, குவைத் பிரதமர் ஷேக் சபா காலித் அல்ஹமாத் அல்சபாவை ஜெய்சங்கர் சந்தித்தார். இந்தியா-குவைத் இடையிலான தூதரக உறவின் 60-வது ஆண்டு நிறைவையொட்டி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இருநாட்டு உறவை உயர்மட்டத்துக்கு கொண்டு செல்லும் உறுதிப்பாட்டுக்காக ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்தார்.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரில
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
மும்பையை சேர்ந்தவர் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
மரிக்கா பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்
அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ
தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் எ
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும்
இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க
ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&
