இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது!
Jun12
இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது!
தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சுற்றி வருவதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு நேற்று (11) மாலை தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து கியூ பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு சுற்றிக் கொண்டு இருந்த வரை மடக்கி பிடித்து கியூ பிரிவு காவல்துறையினர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிடிபட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(வயது- 47) என்பது குறிப்பிடத்க்கது..