இந்தியாவில கொரோனாவின் 2-வது அலை தணிந்து வரும் நிலையில், 3-வது அலை விரைவில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் எயம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும் டாக்டர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளிடம் செரோ ஆய்வை நடத்தியுள்ளனர். மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த ஆய்வு 5 மாநிலங்களில் நடந்துள்ளது.
2 முதல் 17 வயது வரையிலான 700 குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் 3,809 பேர் என மொத்தம் 4,509 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இந்த சர்வேயில் வியக்கத்தக்க முடிவுகள் வெளிவந்துள்ளன. அதாவது குழந்தைகளின் செரோ பரவல் 55.7 சதவீதமாகவும், பெரியவர்களின் விகிதம் 63.5 சதவீதமாகவும் இருந்துள்ளது. அந்தவகையில் புள்ளி விவர ரீதியாக குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது.
இவ்வாறு குழந்தைகளின் செரோ விகிதம் அதிகமாக இருப்பதாலும், பெரியவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதாலும் கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளை அளவுக்கு அதிகமாக பாதிக்காது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சி
போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ப கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளி கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஜஸ்தா
