பிரிட்டனில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. நேற்று புதிதாக 10633 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுள்ள நிலையில் பாதிப்பு குறைந்தால் ஜூலை 19ம் தேதி அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வரும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார். அதேசமயம் கடுமையான குளிர்காலம் வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் திருப்தி அளிப்பதாக இருப்பதால், ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான பாதையில் பிரிட்டன் பயணிக்கிறது என சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்காக் தெரிவித்தார்.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், குறிப்பாக அடுத்த வாரத்தின் துவக்கத்தில் உள்ள நிலவரத்தை பார்த்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உ
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
அமெரிக்காவின் இன்டியானாபொலிஸில் உள்ள வீடொன்றில் கர்
பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அள
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களைக் கடந்த
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக
லண்டனில் இருந்து கடந்த செவ்வாய்க்கிமை கொச்சிக்கு ஏர்
தினந்தோறும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சேமிப
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
