நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புபவர்கள், யாழ்ப்பாணத்தில் இந்தியா முன்னிற்பது குறித்து ஏன் கேட்பதில்லை? என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான நேற்றைய களப் பயணத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சீன தொடர்பாக எதிர்க்கட்சியினருக்கே அதிக பிரச்சினை இருக்கின்றது. அரசுக்கு எந்த நாடு உதவி செய்தாலும், அதன் மூலம் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதே எமது எதிர்பார்ப்பு.
மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்துக்கும் சீனா உதவ முன்வந்தால், நாம் அதனையும் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும்போது, விமான நிலையத்தின் தேவைப்பாடு அதிகம் இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடம். சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான சூழலை அமைக்க வேண்டும்.
வடக்கின் வசந்தம், கிழக்கின் வசந்தம் போன்ற திட்டங்களைப் பஸில் ராஜபக்ச முன்னெடுத்தார். பஸில் ராஜபக்ஸ நாடாளுமன்றம் வருவது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” – என்றார்.
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பத
2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று
வல்வட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கில
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து
வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்
சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறி
அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளு
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாத