அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைப் பிரேரணை தொடர்பாக உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை இந்த மாதம் 19 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு செயற்படும் என்பது தொடர்பாக பிரபல ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தில் அவசர தீர்மானம் ஒன்றை எடுக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த அவநம்பிக்கைப் பிரேரணை மீதான விவாதத்தைக் கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்திலேயே இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சுமந்திரன் கூறினார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (06) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்ற
பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவர
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் நேற்று மாலை (10) யா
2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே
மினுவாங்கொடையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப
நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கி
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் எ
வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30,000 இலங்கை
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (
வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதி
தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தன