ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் 21ஆம் திகதி தீர்மானிக்கப்படும்.
– என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பின் பின்னரே அரசில் எமது வகிபாகம் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
அரசு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த ஆறு யோசனைகள் ஏற்கனவே சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் முன்மொழியப்பட்டுள்ளன. ஜனாதிபதியை நேரில் சந்தித்ததன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
ஆளும் கட்சியிலிருந்து வெளியேறுவது, அரசுடன் இணைந்து ஒன்றாகப் பயணிப்பது, எதிர்வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவது உள்ளிட்ட சில முக்கிய யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன” – என்றார்.
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட
பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெ
சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப்
பாதுக்க - அங்கம்பிட்டியவில் மனைவியின் உடலில் ஒருதுண்ட
வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்
கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இரு
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்
யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள ந
வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிராமத்திற்கு தகவல்
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு
நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட