உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நாடுகளில் பருவங்கள் மொத்தமாக மாறி புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன.
அண்மையில் மேற்கு ஐரோப்பியாவில் வரலாறு காணாத வகையில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்தன.
இந்தநிலையில் சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் இங்குள்ள பல்வேறு நகரங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கின.
இதனிடையே மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 8 பேர் காணாமல் போய் விட்டனர். வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து 3.76 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மழை, வெள்ளத்தில் சிக்கிய மக்களை பத்திரமாக அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர்
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி
அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற
தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி
ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவ
மெக்சிகோ நாட்டின் மேற்கு மாநிலமான மைக்கோவாகனில் நடைப
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றா
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு
சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங
ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்
பிரித்தானியா, விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வ
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆய
கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே
