பிக்பாஸ் பிரபலம் யாஷிகா கடந்த சனிக்கிழமை இரவு மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த பவானி யாஷிகா உடன் கடந்த சனிக்கிழமை பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது.
தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் . இந்நிலையில் யாஷிகாவிடம் போலீசார் பெற்ற வாக்குமூலத்தில் யாஷிகா காரை ஓட்டி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அவர் மதுபோதையில் இல்லை எனவும் பொலிசார் விசாரணையில் கூறப்படுகிறது.
அதிவேகமாக காரை ஓட்டி வந்த யாஷிகா கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தில் சிக்கியுள்ளார். யாஷிகா கார் ஓட்டி வந்த போது அவரது தோழி பவானி சீட் பெல்ட் அணியாததால் அவர் விபத்து ஏற்பட்டபோது காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டதாக அவர் வாக்குமூலம் தந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனா
மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ண
கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங
சொத்துகுவிப்பு வழக்கில்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண் பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு
