வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில் மக்கள் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். இதனை நாம் வரவேற்கின்றோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கொரோனாத் தடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் ஆரம்பத்தில் ஆர்வத்தைக் காட்டவில்லை. எனினும், அவர்கள் தற்போது மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு மாகாண மக்களும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
கொரோனாவை விரட்டக்கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசியே. எனவே, நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதில் அரசு அதிக சிரத்தையுடன் செயற்படுகின்றது.
தடுப்பூசிகளைப் பெற்றுவிட்டோம் எனக் கருதி சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் இருக்கக்கூடாது.
கொரோனாத் தடுப்புக்கான சுகாதார விதிகளை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” – என்றார்.
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த
அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசிய
போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதே
2023 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில், மருத்துவ உதவிக்காக
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த