ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள பஸ்களுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்தை நடத்த முடியுமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காரணத்தால் பொதுப்போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனினும், ஆகஸ்ட் மாதம் முதல் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போருக்காக மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கும், இந்த சேவைகளை அலுவலக நேரங்களில் நடத்துவற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அ
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை
சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ
சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகர
உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவி
ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேர
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந