தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற சமயத்தில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வந்தது.
அதன்பின், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது.
தற்போது வரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பா
நீட் தேர்வு பற்றிய ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உள
ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஜமன்கிராமத்தை சேர்ந் சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரண இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்& மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர கே.எஃப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் சே மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக
