ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமடைந்த 13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த சிதம்பரம் விடுதி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி உயிரிழந்த நிலையில், 3 வயது மகளை தம்பி செந்தில் பராமரிப்பில் விட்டு விட்டு வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். தற்போது 13 வயதான அந்த சிறுமி, அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சித்தப்பாவான செந்தில், சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்து உள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்ட நிலையில் சிறுமி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த, கீரமங்கலம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனையின்போது சிறுமியின் வயிற்றில் 7 மாத சிசு இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சித்தப்பா செந்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, செந்தில் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு
கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்
ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற அதிமுக ம டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதிய உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பா பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைதென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான
