வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் என்று திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. ஊதாரித்தனமான முன்னாள் அரசு என்று பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பத்திரிகை சுதந்திரத்தை பற்றி பேசும் ஸ்டாலின், நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் அத்துமீறி லஞ்ச ஒழிப்புத்துறை ஏவியுள்ளார்.
பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம். நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றிவிட்டது . வெள்ளை அறிக்கையின் போது உண்மைக்கு புறம்பான தகவலை நிதியமைச்சர் வெளியிட்டு இருக்கிறார்.வாக்குறுதி அளித்துவிட்டு நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அதிமுகவினர் பொய் வழக்குகளை போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம், பொய் வழக்குகளை கண்டு அதிமுக அஞ்சாது” என்றார்.


காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா
தமிழக பா.ஜ.க. தலைவர்
சென்னை
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தா கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக் திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள் தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ
