ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 317 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கும் நலத்திட்ட நடவடிக்கைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் வசிக்கும் எமது ஈழத்தமிழர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூட்டமைப்பின் சார்பில் அவருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க ஆலோசித்துள்ள அகதி முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிரந்தரமான வதிவிட வசதிகளை ஏற்படுத்துதல், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலன் கருதிய வளர்ச்சித் திட்டங்களுடன் அவர்களின் உயர்கல்விக்கான உதவித் திட்டம் மற்றும் தாயகத்துக்கு மீளக்குடியமர விரும்புகின்றவர்கள் தொடர்பான தீர்மானங்களை முன்னெடுப்பதற்கான குழுவையும் அமைத்து ஆக்கபூர்வமாக நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
முதன்முறையாக தமிழ்நாடு சட்ட சபையில் ஒரு முதல்வர் இப்படியான திட்டங்களை அறிவித்துள்ளதோடு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் வழங்கியுள்ளமையானது ஓர் ஆக்கபூர்வமான செயலாகும்.
இதற்காக எமது மக்கள் சார்பாகவும் கூட்டமைப்பு சார்பிலும் உளம் கனிந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றோம் – என்றார்.
இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொர
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயம
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
மகிந்த ராஜபக்ச தனது 2 பதவிக்காலம் முடிவடைந்ததும் ஓய்வ
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவி
போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய