சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுலா தலத்தில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. இதில், 172 பேர் கலந்து கொண்டனர். மலைப்பகுதியை கடக்கும் சவால் நிறைந்த இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் ஆர்வத்துடன் தங்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்தது. வெப்பநிலையும் கடுமையாக குறைந்தது.
திடீரென தாக்கிய இந்த தீவிர தட்பவெப்பநிலையால் வீரர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். சில வீரர்கள் போட்டி அமைப்பாளர்களுக்கு தகவல் அனுப்பினர்.
இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாரத்தான் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தின் தாக்கம் காரணமாக, 21 போட்டியாளர்கள் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் சிலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பந்தய தூரத்தின் 20 கிலோ மீட்டரில் இருந்த 30 கிலோ மீட்டர் வரை திடீரென பேரழிவு தரும் வானிலை நிலவியதாகவும், குறுகிய நேரத்தில் ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்ததால் வெப்பநிலை கடுமையாக குறைந்ததாகவும் பேயின் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர
உலக சந்தையில்
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக நேற்ற உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்ட உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத இன்று (2) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம் இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெர உக்ரைனை தன்வசமாக்கும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷி
